காந்தி மண் தனது சொந்த நிலையெடுப்புக்கும் பிராந்திய போட்டிக்குமாக தமிழர் நலன்களை தமிழர் உரிமைகளை போட்டு மிதிக்கின்றது என்ற விடயத்தை நாங்கள் உணர சரியாக புரிந்து கொள்ள பிறர் அது பற்றி சொன்ன விடயங்களை ஆமோதிக்க எவ்வளவு நாள் எடுத்தது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எப்போது நாங்கள் அதை புரிந்து கொள்ள ஆரமிபித்தோம்.ஏன் இந்தியா தமிழ் நாட்டு தமிழர் கூட புரிந்து கொள்ள எவ்வளவு காலம் எடுத்துள்ளது என்பது எல்லோரும் தெரிந்து வைத்துள்ள விடையம்.எனவே இதையொட்டிப்பார்தால் எங்களின் தவறுகள் புரியும் எங்கள் பக்கம் உள்ள பலவீனங்கள் புரியும் இப் பல வீனங்கள் எதிரிக்கும் வஞ்சகம் செய்பவர்களுக்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதம்.அதாவது நாங்கள் நினைக்கும் சிறிய தவறுகள் கூட எதிரிக்கு எம்மை அழிக்க கிடைக்கும் பொன்னான சந்தர்ப்பங்கள் ஆகலாம்.நாம் சறுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் எதிரி எங்கள் மீது சேறு பூசகிடைக்கும் பெரு விளாக்கள்.
நாங்கள் தவறு விடும் ஒவ்வொரு இடமும் எதிரிக்கு எங்கள் போராட்டத்துடன் விளையாடக்கிடைக்கும் பெரும் மைதானங்கள்.
குறிப்பாக எங்களிடையே ஏதாவது சிறு கருத்து மோதல்கள் வரும் பட்சத்தில் அது எதிரிக்கு மகிழ்வூட்டும் பெரும் ஊக்கத்தினை கொடுக்கும் எம்மை அழிக்க பெரும் அத்திவாரத்தினையும் இட்டுவிடும் காலங்காலமாக எங்கள் உளவுரணைச்சிதைக்க குறிப்பாக போராளிகளை போராடும் மக்களின் உளவுரணைச்சிதைக்க பாடாத பட்ட அவர்களின் சுயரூபங்கள் எங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.அது மட்டுமல்லாமல் அவ்வப்போ புலம் பெயர் எங்களின் உளவுரனிலும் சோதனை வைத்துப்பாக்க அவர்கள் தவறவில்லை.தற்போதும் கூட அது நன்று நடந்து வருகின்றது. அதாவது ஏராளமான முட்டாகள் பேன்று அவர்கள் செயல்ப்பட்டு தாங்களே குட்டு வாங்கியதும் எங்களுக்கு நன்று தெரியும் அவர்களுக்கும் நன்கு தெரியும் ஆனால் அவர்கள் இன்னும் ஓயவில்லை கிடைக்கும் நேரமெல்லாம் கதைபுனைவதும் கருத்துக்கள் கூறுவதும் கண்டுபிடிப்புக்கள் செய்வதும் தொழிலாக அலைகின்றனர்
முன்னய சந்தர்ப்பங்களில் சிறீலங்கா மற்றும் சர்வதேச பரப்புரைகளில் ஒரு தொய்வு இருந்த காலம் தற்போது சிறீலங்கா பொய்சொல்லும் நாடுகளில் முதல் இடம் காணமுன்னே கண்டாதாக கூறும் வேகம் அதில் உள்ள அதற்கு முண்டுகொடுத்து தூக்கிவிட சர்வதேச ஊடகங்கள் பல உள்ள இந்தியாவின் ஊடகங்களும் பல பல விதமாக உதி வருகின்றது.ஏன் சில நாடுகளின் புலனாய்வு அமைப்புக்ள் சிறீலங்காவுக்கு இவ் தமிழ் மக்களின் உளவுரணை உடைக்க போராடும் மக்களிடை பிணக்குகளை ஏற்படுத்த அறிவுரைகள் தகவல்கள் வழங்கி வருகின்றமை தெரிந்த விடயம்.இவ் ஊடகங்ள் மற்றும் அவற்றின் ஊகங்கள் மிகவும் மோசமான தாக்கங்களை போராட்டங்கள் மீதும் போராளிகள் மீதும் கொண்டுவரும் என்பது நாங்கள் முன்னய காலங்களில் புரிந்து கொண்டுள்ளது.பயங்கரவாதம் என்று ஒரு இடத்தில் உச்சரிக்க அது எவ்வாறு எல்லா இடமும் உச்சரிக்கப்பட்டது அதை உச்சரிக்க வைத்தது யார் என்பது இங்கு சிந்திக்க வேண்டியது.
அந்த சந்தர்ப்பத்தில் வீதியில் இறங்க வேண்டிய நாம் 10 வருடம் பிந்தி இப்போ இறங்கியுள்ளோம். ஆனால் வேகத்துடன் புது வியூகங்களுடன் இறங்கியுள்ளோம்.உலகமும் திரும்பும் அளவுக்கு இறங்கியுள்ளோம் உலகத்தினை திருப்பும் வேலையிலும் இறங்கியுள்ளோம்
குறிப்பாக வணங்கா மண்நோக்கி பயணிக்கும் வணங்கா மண் இவ் வணங்கா மண்ணின் பயணம் வணங்கா மண்ணில் உள்ள எமது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் ஒன்று ஆனால் அயலில் உள்ள பலருக்கு ஏன் பல வெளிநாட்டவருக்கு இது கசப்பான தமிழரின் ஒற்றுமை பற்றி பாடம்.எனவே இவ் பாடத்தை முழையில் கிள்ளி தமது பாடத்தை தமது வஞ்சகப்புத்தகங்களின் பக்கத்தை படிப்பிக்க ஆரம்பிக்க கடுமையாக அவர்கள் முயலுவார்.
வணங்கா மண்ணின் பேச்சு அடிபட்டபோதே அதை தொடங்கியும் இருப்பார்.இது அவர்களுக்கு ஓவ்வாமையை கட்டாயம் ஏற்படத்தியிருக்கும் ஒரு விடயம் நிச்சயம் புலம் பெயர் தமிழ் மக்களை பிரித்து விடவேண்டும் அவர்கள் ஒற்றுமையை குலைத்து விடவேண்டும் என்று உழைக்க ஆரம்பித்திருப்பார்கள்.இதன் தாக்கங்கள் இன்னும் நாம் உணர ஆரம்பிக்கவில்லை அவர்கள் இட்டுள்ள அத்திவாரம் அல்லது எமது ஒருங்கிணைந்த போராட்டத்தினை குலைக்க அவர்கள் போட நினைக்கின்ற அத்திவாரத்தை நாங்கள் முழையில் கிள்ள வேண்டும் இல்லது அத்திவாரம் போட நினைக்கின்ற அவர்களை இனம் கண்டு விலக்க வேண்டும்.இவை சற்று கடினமானவை இலகுவில் எட்ட முடியாத இலக்குகள்.இது எல்லோருக்கும் நன்று புரியும். ஆனால் அவ்வாறான தாக்கங்கள் வந்த பின்னர் தடுப்பது என்பதை விட வரமுன்னர் காப்பது நல்லது.தடுப்பது சிறந்தது.
இன்று இலவு காத்த கிளிபோல் இருக்கும் சிங்களம் மற்றும் இந்தியாவின் சில தமிழ் இன வெறுப்பாளர்கள் வணங்கா மண்ணை அழித்துவிட துடித்து நிற்பவர்களுக்கு அவர்களின் வாய்களுக்கு மெல்ல நல்ல அரிசிப் பொரியை நாங்களே வழங்குவதாக முடியும் எங்கள் கவலையீனங்கள்.இவற்றில் வரும் உடனடித் தாக்கங்களை விட பாரியவை நீண்டநாள் தாக்கங்கள்.அதாவது காலம் தாழ்த்திய விளைவுகள் எனவேதான் நாம் எங்கள் ஒன்றிணைந்த போராட்டத்தில் காட்டும் வேகத்தினை அதனை ஒருங்கிணைப்பதில் உள்ள வேகத்தினை திட்டமிடலை மிக நுணுக்கமாக அவதானிக்வேண்டும்.குறிப்பாக இன்று எமது இளையவர்கள் மிக அரிய செயலை செய்து கொண்டுள்ளார்கள் உலக இளையவர்களுக்கு முன் உதாரணமாக செயற்பட்டுக் கொண்டுள்ளார்கள்.தாயக மக்கள் மற்றும் உறவுகளுக்கான அவர்களின் உழைப்பு பலராலும் போற்றப்டுகின்றது அதே வேளை பலரால் கழுகுக் கண் கொண்டு அவதானிக்க படுகின்றது. என்பதும் அவதானிக்கபடவேண்டியது எச்சரிக்கையாக நோக்க பட வேண்டியது இது வெளியில் புலப்படும் அவதானிப்புகள் மற்றும் இலகுவில் அவதானித்து அறிய முடியாத அவதானிப்புக்கள் என வகைப்படுத்தலாம்.
போராட்டம் என்பது அவர்களில் பலருக்கு புதிய விடயம் அதற்காக அவர்கள் போராட்டம் பற்றிய அறிவு அற்றவர்கள் என்றில்லை இன்றைய காலத்தின் தேவை மற்றும் போராட்ட வடிவங்கள் கருதி அவர்களின் வேகம் செயல்பாடு கருத்துரைகள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் பலமானவையாக கருதப்படுகின்றன காணப்படுகின்றன, இதற்கு சான்றாக சில அடிப்படை வெற்றிகள் கண்ணோட்ட மாற்றங்கள் என்பனவற்றினை கூறலாம்.போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது அதில் போராளிகள் எவ்வளவு கடுமையாக உழைக்வேண்டும் அது மட்டுமல்லாமல் எந்த அளவுக்கு அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சற்று புரிந்திருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு எங்கள் தாயகமும் சரி போராட்டமும் சரி எதிரிகளின் நயவஞ்சகத்தால் அழிக்கப்பட்டது தெரிந்திருக்காது.எங்களை அழிக்க எந்த அளவில் எதிரி கீழ்தனமாக சிந்திப்பான் என்பது பற்றிய அனுபவம் பெரிதாக இருக்காது.
இந்திய ஆக்கிரமிப்பின்போது யாழ்ப்பாணத்தின் வளம் மிக்க நிலங்களில் பரப்ப்பட்ட பாதீனியம் என்றும் களை திட்டமிட்டு இந்திய ஆட்சியாளர்களால் தாய்நிலத்து வழங்களை அழிக்கவென்று பரப்பப்பட்டதை நாம் எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்.
இன்றும் யாழ்ப்பாணத்தில் பாதீனியம் செய்யும் அட்டகாசங்கள் எந்த அளவில் மக்களில் வாழ்வாதாரங்கள் மற்றும் பயிர் நிலங்களை பாதிக்கின்றது என்பது நாங்கள் சிந்தித்தில்லை.இதன் மகரந்தங்கள் சுவாசக்கால்வாயினுள் செல்லும் பட்சத்தில் இழுப்பு மற்றும் மூச்சடைப்பு ஏற்படும் விலங்குகள் கால்நடைகள் இறக்கும்.கர்பிணிகள் அதிகம் பாதிக்கப்டுவர் அதாவது சுவாசக்குழாய்க்குள் பாதீனியத்தின் வித்துக்கள் மகரந்தங்கள் செல்லும்போது சுவாச சிக்கல்கள் வந்து குழந்தைகள் இடம் மாறும் இல்லது சிக்கலான இடங்களில் சிக்கி தாய் சேய் இரண்டும் இறக்கும்.
மட்டக்களப்பில் பரப்பப்பட்டது கஞ்சா. மிகவும் வேகமாகவும் காட்டுக்குள்ளும் பரப்பப்பட்ட கஞ்சாவை அழிப்பதற்கு போராளிகள் பலவருடம் போராடினார்கள் என்பது தாயக மக்களுக்கு தெரியும். அதுபோல் பாதீனியத்தினை அழிக்க யாழ் மக்கள் இன்னமும் போராடி வருகின்றார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.இவை இரண்டும் சிறு உதாரணங்கள் அதாவது பேராட்டத்தினை போராளிகளை வெல்ல முடியாது என்பது அன்று சிங்கள மற்றும் இந்திய அரசுகளுக்கு தெரிந்ததை அடுத்து இவ் பயங்கரமான அணுகுமுறை மூலம் தமிழர் தாயகத்தில் நீண்டகாலத்துக்கு நிலைத்திருந்து அழிவை ஏற்படுத்தும் இவ்வாறான ஈனச் செயல்களை செய்து சென்றுள்ளனர்.
எனவே அன்றைய இன்றைய நிலைகளை ஒப்பிட்டு பார்க்கவேண்டும் அவற்றின் தாக்கங்கள் எவ்வாறானவை அவை என்ன நோக்கத்துக்காக செய்யப்பட்டுள்ளது என்பதை சிந்திக்கவேண்டும்.எனவே இவ்வாறு ஈனச் செயல்கள் செய்தவர்கள் இன்னமும் எங்களின் எரிதிகளாக இருக்கின்றார்கள் .இன்னமும் அதிகரித்த பகைமை கொண்டு நிற்கின்றார்கள் எனவே அவர்களின் திட்டங்கள் செயற்பாடுகள் எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்பது அளவிடக்கூடியது.அதாவது இன்றைய ஈழ இளையவர்களின் போராட்டம் வெறும் போராட்ம் மட்டுமல்ல புலம் பெயர் தமிழர்களின் குரல்கள் வெறும் குரல்கள் அல்ல தமிழ் மண்ணின் தமிழீழத்தின் எதிர்காலம் குறிப்பாக இளையவர் போராட்டங்கள் இளையவர் எழுச்சிகள் தமிழீழத்தை விரும்பாதவர்களுக்கு தமிழர் தாயகத்தை விரும்பாதவர்களுக்கு.வேப்பங்காய் என்பது அறிந்தது.
குறிப்பாக இன்றைய நிலையில் அனாதையாய் கிடந்த பலர் அரசியல் அத்திவாரம் ஒன்றை இட்டுவிட துடிக்கின்றது நாம் அறிந்தது.
அதாவது நீலிக்கண்ணீர் வடிப்பது போன்று நடத்டிது உலகத்துக்கு தாம் சமாதான பிரியர்கள் மக்கள் நலன் விரும்பிகளாக காட்டி ஒரு சிறு அரசியல் குடிசைக்குள் தஞ்சம் புகுந்து அங்கு கிடைக்கின்றதை சுருட்டி விட துடிக்கின்ற அந்த தமிழ் போலிகள் பலருக்கு இன்றைய புலம் பெயர் மக்களின் இளையவர்களின் போராட்டங்கள் கிலிகொள்ள செய்துள்ளது.
அதாவது புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேசம் கண்டு கொண்டால் அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிங்களவர் அடக்குமுறைகள் அர்களின் நோக்கங்களை சர்வதேசம் புரிந்து கொண்டால் அல்லது புலம்யெர் தமிழ் மக்களின் தொடர் போராட்டங்கள் அவர்களுக்கு புரிய வைத்து விட்டால் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று அவர்கள் சிந்திப்பார்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள் என்பது அவர்களின் அண்மைய சில வேடிக்கையான பேச்சு அறிக்கைகளில் இருந்து கண்டு கொள்ளலாம்
.
முன் சொன்ன வெளிநாட்டுச்சக்கதிகள் மற்றும் சிங்கள இந்திய புலனாய்வாளர்களைவிட இவர்கள் மிகவும் மோசமானவர்கள்.தமது நலனுக்காக எதையும் விற்றக துணிந்த தமிழர் என்பது தெரிந்தது. எனவே இவர்களிடத்தில் கூடுதல் கவனம் தேவை.அவர்கள் தமிழ் பேசி எங்களுடன் வாழும் எம்மவர்கள் எனவே இவர்களை அடையாளப்படுத்துவது மிகச் சிரமம்.அது மட்டுமல்லாமல் இவர்களை கண்காணிப்பது கூட மிகவும் கடினம் இவர்கள் மீது அவதானமாக இருக்க முயலும்போது உண்மையான பற்றாளர்கள் பாதிக்கப்படுவார்கள் சந்தேகிக்கபடுவார்கள் இது நியதி. இது கூட பிளவுகள் பிரச்சினைகளுக்கு வழியேற்றபடுத்திவிடும்.ஆனால் இதில் தமிழர்கள் ஆகிய நாங்கள் கூடுதல் புரிந்துணர்வுடன் அர்பணிப்புடனும் இருந்தால் எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது எங்கள் ஒற்றுமையை குலைக்க முடியாது.
அன்று யேசுபிரானை காட்டிக் கொடுத்த யூதாஸ் போன்றுதான் எதிரிகள் இருப்பார்கள் என்றில்லை அகிம்சை பேசும் அகிம்சையின் இலக்கணமான காந்தியடிகளின் நாடே கொலைக்கும் இனத்துடைப்புக்கும் கைகொடுத்து நிற்கையில் இன்றைய எதிரிகளின் வடிவங்கள் கண்டறிய முடியதவை என்பதுடன் முன்னய கணிப்புகளில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் சற்று வித்தியாசப்பட்டு நாம் சிந்திக்கவேண்டும் அவதானத்துடன் எவரையும் அணுகவேண்டும்.
குழிபறிப்பவர் பாமரன் உருவிலும் வரலாம் இல்லை படித்தவராகவும் எம்முன் தோன்றி எம்மை படுகுழியில் தள்ளலாம்.
அதுபோல் எங்கள் தகவல்களை திரட்டி எங்கள் நடவடிக்கைகளை நோக்கி எங்கள் போராட்டங்கள் முன்னொடுப்புக்களை குழப்பி இன்றைய நிலையில் ஒரு தொடர்ச்சியின்மையை ஏற்படுத்துவதிலும் அவர்கள் மிகவும் உன்னிப்பாக இருக்கக்கூடும்.
ஏதாவது வெளிநாட்டுச்சட்ட திட்டங்களில் ஏதாவது ஓட்டையை பயன்படுத்தி அதில் எங்கள் போராட்டங்களை விழுத்தி தற்காலிகமாகவோ இல்லை நீடித்திருக்க கூடியதகவோ ஏதாவது செய்து விட்டாலும் அவர்கள் பரப்புரைக்கு அது பெரும் உதவியாகிவிடும்.
கனடாவில் நடந்துள்ள சில சம்பவங்கள் அவுஸ்ரேலியாவில் நடந்தாதாக கூறப்படும் சம்பவங்கள் மற்றும் நியூசிலாந்தில் நடந்துள்ளதாக பதியப்பட்ட சம்பவங்கள் எங்கள் அவதானத்தினை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதிற்கு எடுத்து காட்டாகும்.
அதாவது எம்முள் வாழும் காட்டிக் கொடுப்பாளர் உதவியுடன் சிங்கள காடையர்கள் எங்களை தாக்கி தங்கள் வலைக்குள் எங்களை இழுத்து எங்கள் போராட்டங்களுக்கு தடையிட முயலுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.அச்சம்பவங்கள் வெறும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்தது அன்று அவை அனைத்தும் திட்டமிட்டு நடாத்தப்பட்டதாக கருதுவது எங்களை மேலும் தயார்படுத்தி வைத்திருக்க.உதவும்.
No comments:
Post a Comment