Sunday, May 24, 2009

தமிழீழ விடுதலைப்போராட்டம்…

தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை விடுதலைப்போராட்டமாக காணாமல் அதை சுயலாப அரசியலுக்காக பயங்கரவாதம் என்னும் பதத்துள் அடக்கி அதனூடு தற்சார்பு தளம் ஒன்றை ஏற்படுத்தி அதில் மேடையிட்டுக் கொள்ள அதாவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை பயன்படுத்தி தமிழீழத்துள்குள் அல்லது சிறீலங்காவுக்குள் கால் வைத்துவிட நீண்டகாலமாக நடக்கும் போட்டியில் தமிழ் மக்கள் எண்ணுக் கணக்கின்றி கொன்றொழிக்கப்பட்டு வருகின்றமையும் அண்மையில் இந்தியாவின் பொருளாதார வல்லரசு வெறியால் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு வருகின்றமையும் லட்சக்கணக்கில் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டு ஏதிலிகள் என்னும் நிலைமையை விட மோசமான நிலைமையில் உள்ளதும் அதாவது உலக யுத்தங்களின் பின்னரான மிகப் பெரும் மனித பேரவலம் நடந்து கொண்டுள்ளதும் உலகம் இதை பார்த்து கதை பேசி வருவதும் மாத்திரம் நடந்து கொண்டுள்ள மிகக் கொடிய உண்மை.

கேட்பார் யாரும் இன்றி தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் கைகால்கள் பறிக்கப்பட்டும் வரும் நிலையில் அண்மையில் மிகவும் பொறுப்பு வாய்ந்தவராக உலகின் வல்லரசாக போட்டி போடும் நாடு ஒன்றின் தலைவராக உள்ள மன்மோகன்சிங் சொன்ன கருத்து ஒன்று மொத்த தமிழ் மக்களையும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.

அதாவது இவ்வளவு மனித அவலத்தின் மத்தியிலும் சிறீலங்கா அரசின் பரப்புரைகள் பொய்யாகி நிற்கின்றதை உணரமுடிகின்ற வேளையிலும் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய இந்திய தலைவரின் கருத்து இந்தியாவின் காங்கிரசின் கொள்கைகள் என்ன என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

இன்னமும் தமிழ் மக்கள் போராட்டங்களை விடுதலைப்போராட்டமாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் இந்தியா தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அபிப்பிராயம் என்ன என்பது மன்மோகன்சிங்கின் பேச்சில் புலப்பட்டுள்ளது.அதாவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நேரடியாக விமர்சிக்க அஞ்சி விடுதலைப் போராளிகளை அதன் தலைமையை விமர்சிப்பதாக காட்டி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டகங்களை மழுங்கடித்தது போன்று தற்போது தோற்கடிக்க துணிந்து விட்டது இந்தியா என்பது புலப்படும்.

அதாவது தமிழ் மக்கள் நிச்சயம் துன்னபத்தினுள் சிக்கியுள்ளார்கள் என்பதுடன் அவர்களை சிறீலங்கா திட்டமிட்டு இடம் பெயர வைத்துள்ளது என்பது இந்தியா மட்டுமல்ல உலகத்தின் அத்தனை மக்களுக்கும் குறிப்பாக மனிதாபிமானம் கொண்டுள்ள அத்தனை மக்களுக்கும் தெரியும்.
அது மட்டுமல்லாமல் பொய்யான தகவல்கள் புள்ளிவிபரங்கள் இதுவரை வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதும் வன்னியில் இருந்து கடந்த சில நாட்களில் சிறீலங்கா படையினரால் கொலை, ஆயுதப்பிருயொகம் மூலம் அச்சுறுத்தி சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்கள் தொகையில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

வெறும் 70000 மக்கள் தான் அங்கு உள்ளார்கள் என அடிக்கடி கூறி வந்த சிறீலங்கா படையும் அரசும் இதை ஆமோதித்த இந்திய வெளிநாட்டு இராஜ தந்திரிகளும் வன்னியில் இருந்து எவ்வாறு 190000 மேற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரிடம் வந்துள்ளனர் என்பது பற்றி இன்னும் சிந்திக்கவில்லையா?

இவ்வாறன மௌன விரதத்துக்கு அவர்கள் இந்தியாதான் காரணம் சோனியாவின் யுத்த வெறிதான் காரணம் அதாவது இந்தியா சொல் மிக்க மந்திரம் இல்லை எனக்கூறி நழுவி உலகம் விடுவதைக் காணலாம் அண்மையில் ஐநாவின் சிறப்பு தூவராக வந்த நம்பியாரின் நிலையும் இதுதான் சிறீலங்கா வந்து தான் கண்டவற்றை கேட்டவற்றை அறிக்கையாக்கி அறிக்கையை எடுத்து செல்ல வேண்டிய இடம் ஐ.நாவே தவிர இந்தியா இல்லை ஆனால் மாறாக என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும

முன்னர் நடந்த சில கசப்பான அனுபவங்களில் இருந்து இந்தியா கற்றுக் கொண்டுள்ள பாடங்களில் இதுவும் ஒன்று அதாவது சிறிலங்கா அரசினால் மேற் கொள்ளப்பட்ட சில பயங்கரமான தமிழ் அப்பாவிகள் கொலை வழக்கை விசாரிக்க வந்த இந்தியாவின் தலைமை நீதிபதி பகவதி தலைமையிலான குழுவை சிறீலங்கா நடாத்திய விதம் இறுதியில் இவ் குழு இட்ட அறிக்கை என்பனவில் இருந்து விழித்துக் கொண்ட இந்தியாவும் இந்தியப் புலநாய்வு அமைப்பு றோவும் இம்முறை முந்திக் கொண்டன நிஜத்தை சொல்பவரை விட நிஜத்தை மறைப்பவர் அதிகம் அக்கறையுடன் இருப்பார் என்பது இங்கு மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

அதாவது முன்னர் சிறீலங்காவை காப்பாற்ற இந்தியா போட்ட அவ் ஜனாதிபதி ஆணைக்குழு நாடகம் இறுதியில் இந்திய அதிகாரியால் அம்பலமாக்கப்பட்டதில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில் வேறு ஒருவரும் புகுந்து விடாத வண்ணம் தானே சிறீலங்காவின் தமிழ் சிங்கள பிரச்சினைக்குள் ஆழமாக காலை விட்டு விடவேண்டும் என்பதில் இந்தியா குறியாக உள்ளது.
இது சிறிலங்கா தரப்புக்கு தற்போது மிகப் பெரும் சந்தோசமாக உள்ளதுடன் தமது தமிழ் கொலைக்கு சிறந்த பக்கபலமாகவும் பயன்படுத்தி வருகின்றது.இதனால்தான் சிறீலங்கா எவ்விதஅழுத்தங்களுக்கும் கீழ் படியாமல் யுத்தினை முன்னெடுத்து செல்வதுடன் உலக இராஜ தந்திரத்தையும் ஏமாற்றி வருகின்றது.

தற்போது சிறீலங்காவுக்கு ஒத்து நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியா இந்தியப் பொதுத் தேர்தல் தற்போது நடந்து கொண்டுள்ளது அதில் இரண்டு கட்ட வாக்கு பதிவுகள் முடிந்து விட்டது.இதில் தமிழ் நாடு இன்னும் இடம் பெறவில்லை என்பதால் இன்னும் இந்தியாவின் போக்கில் மாற்றம் வரவில்லை ஆனால் அதற்கான ஆரம்ப படிகள் செவ்வனே அரங்கேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.

அதாவது சிதம்பரமும் ஏனைய சிலரும் யுத்த வெறுப்பர்கள் போல் தம்மை காட்டிக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படைக்கும் தாம் விட்ட யுத்த நிறுத்த அழைப்பை இரு தரப்பும் நிராகரித்துள்ளதாக கூறி தற்பொருமைப்பட்டுக் கொண்டுள்ளதில் இருந்து அவர்களின் சிறுபிள்ளை தனமான கருத்துகள் தெரிய வருகின்றது.விடுதலைப்புலிகள் யுத்தம் நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் காப்பற்ற படவேண்டும் என்பதில் தொடர் அறிக்கைகள் வேண்டுதல்கள் விடுத்து வரும் நிலையில் சிதம்பரத்தின் இக்கருத்து சிதம்பரம் ஈழத்தமிழ்ர் பிரச்சனையில் கொண்டுள்ள புரிந்துணர்வு என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இதே வேளை சிவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் இலங்கை வருகை மிகப் பெரிய நாடகம் நான் அடிக்கின்ற மாதிரி அடிக்கின்றேன். நீ அழும் மாதிரி அழு என்னும் சொல்லாடலுக்கு அமைய அவர்கள் சிறீலங்கா வந்து அரச தலைவருடன் 1.5 மணி நேரம் இரகசிய உரையாடல் மேற் கொண்டு திரும்பியுள்ளனர்.ஆனால் ஊடகங்களுக்கு பேசிய விடயங்கள் பற்றி கருத்து வெளியிட வில்லை இத்துடன் அது பற்றி அறிக்கையோ இல்லை உத்தியோக பூர்வ கருத்தே வெளியிடவில்லை.இதில் இருந்து திரை மறைவில் இன்னும் தமிழரை அழியுங்கள் என்னும் வாக்குறுதி சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.என்பது புலப்படுகின்றது.

அதாவது தெழிவான வரைவிலக்கணம் அற்ற திறந்து விடப்பட்ட சொல்லாடலான பயங்கரவாதம் என் பதத்தினை பயன்படுத்தி கொல்லை பக்கத்தால் கள்ளர் உள் நுளைவது போன்று நூளைந்துள்ள இந்தியா இன்றும் அதை பயன்படுத்தி தனது தரப்பு நியாயத்தினை கற்பிக்க நிற்கின்றது.
யாராலும் எவரையும் எச்சந்தர்ப்பத்திலும் விழிக்கக் கூடிய பயங்கரவாதி என்னும் சொல்லில் உலகம் தாவித்திரிகின்றது. அதில் தானும் விதிவிலக்கு இல்லை என்பது இந்தியாவின நிலைப்பாடுகளில் இருந்து புரிய முடிகின்றது.ஆனால் அதில் என்ன கவலை எனில் மன்மோகன் சிங்கின் அந்த கருத்து மன்மோகன் சிங்கின் பயங்கரவாதக் கொள்கை பற்றி பல கேள்விகளையும் அவரின் பேச்சின் தொனியும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் அது வெளித் தெரியாத பல சிக்கலினுள் மாட்டி நிற்கும் போதும் றாஜீவ் கொலையை வைத்து தனது அரசியல் காயை நகர்த்த சரியான சந்தர்ப்பத்தினை மகிந்த ஆட்சிக்கு வந்த உடன் தமிழ் அழிப்பு யுத்தின் ஊடு ஏற்படுத்தி கொண்டது தெரிந்தது.
முன்னய காலங்களின் அதாவது பிரேமதாசா காலத்தில் பெற்ற அனுபவங்களின் பிறகும் விடுதலைப்புலிகளால் காட்டப்பட்ட அமைதிப்படை எதிர்பையும் கண்டு பின்னின்ற இந்தியாவும் காங்கிரஸ் அரசும் மீண்டும் இலங்கைக்குள் வர தொளிவான அரசியல் கொள்கைகள் எதுவும் அற்ற மகிந்தவை பயன்படுத்தியுள்ளது.

இதற்கு ஊக்கமளித்து தனது நடவடிக்கைக்கு பாதகம் ஏற்படாத வகையில் இருப்பதற்கு பயன்படுத்தி கொண்ட வார்த்தை பிராந்திய பயங்கரவாதம்.கொல்லைக்குள்ளும் தனது வீட்டுக்குள்ளும் திருடனை வைத்துக் கொண்டு பக்கத்து வீட்டில் உள்ளவனை பார்த்து உன் வீட்டில் வரும் திருடனை பிடிக்க நான் வருகின்றேன் என இந்தியா வந்ததன் விளைவை மும்பாயில் உணர்ந்துள்ளது.
தற்போதும் அதில் இருந்து மீளாத இந்தியா எஞ்சியிருந்த மன்மோகன் சிங்கை வைத்தும் தமது பற்ருறுதியான தமிழ் அழிப்பு யுத்திற்கு நியாயம் கற்பித்துள்ளது.அதாவது மன்மோகன் சிங் இந்தியாவின் சீக்கிய இனத்தவர்.இந்தியாவின் சுதந்திரத்துக்கு பின்னான மிகவும் கறைபடிந்த வரலாறுகளில் சீக்கியர்கள் பதியப்பட்டுள்ளனர்.

அதற்கான காரணம் அவர்களின் சுதந்திர தாகம் அதாவது தனி சீக்கிய மாநிலமாக இன்றைய பஞ்சாப்பை மாற்ற அவர்கள் காட்டிய வேகம் அதாவது காலிஸ்ரான் எனப்படும் தனி சீக்கிய மானிலம் ஒன்றை அமைத்துக் கொள்ளவும் அதில் சுதந்திர அரசை நிறுவி வாழவும் அவர்கள் ஆசைப்பட்டது அதாவது இந்திய சனத் தொகையின் 3 வீதமான் சீக்கியர் ஆசை பட்டதுதான்.இவ் விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாக்கபட்டு சீக்கியர் புனித தலமாக கருதப்படும் பொற்கோயில் படுகொலையில் போய் முடிந்ததும் அதில் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டதும் பலர் இன்று ஈழத்தமிழர் நாடுகடந்து வாழ்வது போன்று இன்னமும் நாடுகடந்து வாழ்வதும் குறிப்பிடத்தக்கது
.
நாடு கடந்து வாழும் சீக்கியர்கள் இன்னமும் விடுதலை என்னும் விடயத்தில் சற்று அக்கறையாக உள்ளதும் அவர்களிடத்தில் சில அமைப்புக்கள் இயங்குவதும் குறிப்படலாம்.அதாவது சீக்கியர்களை அடக்க இந்தியா மேற் கொண்ட வன்முறையில் உயிரிழந்த 4000பேருக்கு மேற்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்கள் இதில் இடக்கி இருப்பதுடன் அவர்கள் ஐரிஸ் கடலின் மீது இந்தியா விமான சேவை விமானத்தை குண்டுவைத்து தகர்த்தமை முதல் பல வன்முறைகளை நாடு கடந்து நிகழ்த்தியும் உள்ளனர்.இதை இன்றைய இந்திய அரசும் ஈழத்தமிழ் மக்களும் நன்கு பரிந்து கொள்ளவேண்டும்.இப்படிப்பட்ட ஒரு இனம் சார் மனிதர் தான் மன்மோகன் சிங் என்பதை அவர் மறந்துள்ளார் இல்லை அவரது கதிரை ஆசை அதை மறக்க வைத்திருக்கலாம்.

அதை நாடு கடந்து வாழும் சீக்கிய மக்களுக்கும் சீக்கிய போராளிகளுக்கும் புலம் பெயர் உறவுகள் தொழிவு படுத்த வேண்டும்.இவர்களின் சுயநல அரசியலை வெளிக் கொண்டு வந்து எமக்கு எமது நாட்டில் கொடுத்த நெருக்கடிக்கு ஒப்பான நெருக்கடிகளை நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
அடுத்து உலக ஓட்டத்துடன் பொருளாதார தொழில் நுட்ப வழத்துடன் இணைந்து சென்ற தமிழ் மக்கள் இன்று இந்தியா மற்றும் சிறீலங்கா படையினரால் நடத்தப்படும் யுத்தம் மூலம் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது புரியாதவர்கள் எவரும் இல்லை உணராதவரும் எவரும் இல்லை.மேற்கு கரையில் மாத்திரம் குண்டு விழும் போது கத்துபவர்கள் ஈழக்கரை முழுவதும் குண்டு விழ மௌனமாக இருப்பதும் இந்தியாவின் கபட நாடகங்கள் காரணமாகத்தான்.இன்று இவ்வளவு தூரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போது இந்தியப்படைகள் தமிழர் தாயகத்தினை 80 களில் ஆக்கிரமித்துள்ள போது மக்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும் 87 களின் பின்னரான 20 வருட யுத்த அனுபவங் கொண்ட மக்கள் கூட சிறீலங்கா இந்தியாக்கூட்டணியால் ஆயிரமாயிரமாக கொண்று ஒழிக்கப்பட்டும் இன்றும் பல ஆயிரமாய் படுகாயப்படுத்தப்பட்டும் இலட்சமாய் இடம்பெயர வைக்கப்பட்டும் உள்ளதை 87களுடன் ஒப்பிட்டு பார்த்தால் அன்று தமிழ் மக்கள் எந்த அளவில் துன்பப்படுத்த பட்டிருப்பார்கள் என்பது புரியும்.

இன்று ஊடக வளர்ச்சி விடுதலைப்புலிகள் மக்களுடன் நெருங்கியுள்ளமை காரணமாக உலக நாடுகள் ஊடகங்களுக்கு இனப்படுகொலை விடயங்கள் ஓரளவுக்கு தன்னும் செய்தியாக்கப்படுகின்றது. ஆகையால் அன்றைய காலத்தில் இவ்வாறான தொழினுட்ப ஊடக வளர்ச்சி இல்லை என்பதால் எந்த அளவில் செய்திகள் முடக்கப்பட்டிருக்கும் என்பது உணரலாம்.

எனவே இவ்வாறான இழப்புக்கள் துன்பங்களை தமிழ் மக்கள் முன்னர் அனுபவித்துள்ளார்கள் என்பதற்கு அளவு கோல் மீண்டும் ஈழத்தில் நடாத்தபப்டும் இந்தியா சிறிலங்கா கூட்டு யுத்தமாகும் இவ்விடயமும் இந்தியர்களுக்கு தெழிவு படுத்தப்படவேண்டியது.குறிப்பாக அரசியல் நாடகமாடும் அரசியல் வாதிகளுக்கு தெழிவு படுத்தபட வேண்டியது.

எனவே தமிழர் தாயகம் மலரும் சிங்களவர் பொய்கள் புலரும் அதற்காக ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் இன்று சிங்கள இந்திய கூட்டால் அழியும் ஒவ்வொரு மக்களையும் போராளிகளையும் மனதில் இருந்தி புது வேகத்துடனான பரப்புரை தெழிவு படுத்தல்களை மேற் கொள் வேண்டும்.
இங்கு நடந்து கொண்டுள்ளது உண்மையில் பயங்கரவாதம் அல்ல மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரும் அல்ல வெறும் பிராந்தியப்போட்டி சிறீலங்காவின் தடம் பதிக்க இந்தியா. அமெரிக்கா, சீனா போடும் போட்டி இதில் நப்பது தமிழ் மக்கள் அழிவது, தமிழர் நிலங்கள் அழிவது என்பது தெழிவு படுத்தப்படவேண்டும்.

No comments:

Post a Comment

 

©2009 THAIMADY RESEARCH | Thaimady comments by KABILAN